Wikipedia

Search results

Friday, September 27, 2013

இலங்கைப் போர்க் குற்றவாளிகளை மார்ச் மாதத்துக்குள் தண்டிக்க வேண்டும்: நவநீதம்பிள்ளை அறிக்கை

கொழும்பு, செப். 26-இலங்கை இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். தமிழர்கள் படுகொலையை தடுக்க எந்த உலக நாடும் முன் வராத நிலையில் அய்.நா. சபை இதில் காலதாமத மாக உண்மையை உணர்ந்து கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையம் மட்டும் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அய்.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம் பிள்ளை போரில் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு பகுதிக்குச் சென்று நேரில் விசாரணை நடத் தினார்.
அப்போது அவர் கண்டதை யும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் மூலம் வாய்வழி அறிக்கையாக அய்.நா. மனித உரி மைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதில் கூறி இருப்பதாவது: போரின் போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், ராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை.
நம்பகத் தன்மை இல்ல
குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராணுவமும், கடற்படையும் நடத் தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை. போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறை யில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் தனி யாக விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது.
விடுதலைப்புலிகள் தொடர்பு டைய போர் குற்றங்கள் முறை யாக விசாரிக்கப்பட வேண்டும் சம்பந்தப்பட்டோர் மீதான வழக் குகள் விரைவுபடுத்தப்பட வேண் டும். திருகோணமலை கடற்கரை யில் 5 மாணவர்கள் கொல்லப் பட்ட வழக்கு ஏ.சி.எப் நிறுவனத் தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப் பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற் றில் முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளது என நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் ராணுவமும் சென்றது குறிப்பிட்ட நவநீதம் பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் இது இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக் குக் கொண்டுவரப்பட்டது என் றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும்.
இராணுவ நடவடிக்கை கவலை அளிக்கிறது
இலங்கையில் சட்டத்தின் ஆட் சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப் படுவது மற்றும் அருகிப்போவது ஆழ்ந்த கவலை அளிக் கிறது. 17 ஆவது சட்ட திருத் தத்தை மீண்டும் கொண்டு வருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப் பட வேண்டும் வட மாகாணத் தேர்தல் நடைபெற் றதை வரவேற்கிறோம் 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று அதிபர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்பு கிறோம்.
போர் முடிந்து நான்கு ஆண்டு களான பிறகும் அங்கு காணப்படும் ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.
தனியாக வசிக்கும் பெண்கள், சிறுமிகள்மீது ராணுவத்தின் பாலியல் அத்து மீறல்கள்   கவலை அளிப்பதாக உள்ளது. பாலியல்  அத்து மீறல்களை அரசு சிறிதும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தனியார் நிலங்களை ராணுவத் தேவைகளுக் காக கட்டாயமாக கையகப்படுத்தப்படுகிறது. வட மாகாணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நட வடிக்கைகளிலும், கல்வி, விவசாயம், சுற் றுலா போன்ற துறை களிலும் ராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவ தாகவும் அவர் தெரிவித்துள் ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விஷயங்களில் இருந்து ராணு வத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள் ளுமாறு அரசிடம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள் ளார்.
கற்றறிந்த பாடங்கள் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளில் கூடு தலாக 53 பரிந்துரைகளை அமல் படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டுகிறோம்.
காணாமல் போனோர்பற்றி....
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும், கிழக்கிலும் காணா மல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந் தாலும், போருக்குப் பிறகு கொழும் பிலும் நாட்டின் இதர பகுதி களிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவுபடுத்த வேண் டும் காணாமல்போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணை யங்களால் பயனேதும் ஏற்பட வில்லை.
காணாமல் போனோர் தொடர் பிலான விசாரணைகளை துரிதப் படுத்த அய்.நா. நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நம்புகிறேன்.
நவநீதம் பிள்ளையின் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று அய்.நா.வுக்கான இலங்கை அரசின் பிரதிநிதி ரவிநாத் தெரிவித்துள்ளார். அய்.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் அவர் பேசுகையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோர அவருக்கு அதிகாரம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment