Wikipedia

Search results

Sunday, June 2, 2013

இந்தியப் பொருளாதாரம்

பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்-தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம், காசு கிடையாது.

 எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு பண்டத்தைக் கொடுத்து, மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்வார்கள். கூலியாட்கள், கைத்தொழில் செய்வோர், ஏவலாள் ஆகியோருக்கும் தானியமே கொடுப்-பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் - பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக ஏதும் கொடுப்பதில்லை.

பெருத்த மிராசுதார்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான், பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப் போட்டு வைத்திருப்-பார்கள். பண்டமாற்றைத் தவிர, சாதாரண மக்கள் பணத்தைப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.

ரூபாய், நாணயம் இவை நம் நாட்டு மொழியல்ல, சின்னப் பணம் அதாவது ரூ.1-க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும், எத்தனை பணம்? என்று தான் கேட்பார்கள். செல்வமுள்ளவனையும் பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலிய-வை-களிலும் 100 பணம் 200 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு-வார்கள். சமீப காலம் வரைகூட மலை-யாளத்தில் திருவாங்கூர், கொச்சி இராச்சியத்தில் சிவில் கோர்ட்டில், ரூபாய் என்று பிராது போடுவதில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும் அதைப் பணமாகப் பெருக்கி, அந்தப் பண எண்ணிக்கை-யைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்-பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே, பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை-விடச் சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால், பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்ட-மில்லையானால் வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலையில்லை. இதுபோலவே இதற்குமுன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கு முன் வந்த ஆரியர்-களுக்கும் இந்த நாட்டில் வேலையில்லை.

சாமி, பூஜை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படி-யில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்-கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கலியாணம் முதலியவை-களால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கை-யைத் தொடங்க வேண்டியிருக்கிறது. இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்-களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்-சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் மேற்கண்ட சடங்கு-களும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம் பூசை ஆகியவை-களுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்-கள் பெரும்பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. ஆகவே, இந்த மாதிரியாக-வெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில் தான் பொருளா-தாரத்தில் சீர் அடைய முடியும்? நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் கவனியுங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை, மேல்நாடுகளைப் பார்த்து - நாளுக்கு நாள் செலவை அதிகரித்து வருகின்றோம்; வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட அதிக ஆடம்பரங்களை விரும்புகின்றோம். இவை-யெல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்ற-மென்றோ சொல்லவில்லை. ஆனால், மேல்-நாட்டார் எப்படிப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தமது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக் கொள்கிறார்களோ, அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டு, வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டுதானே அதில் பிரவேசிக்க வேண்டும்? அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன்? மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து பன்மடங்கு இலாபம் அடை-கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு - இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானத்தோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்-கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை மதமும் கடவுளும் அடுத்த ஜென்மமுமேயாகும். மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும், அநேகமாய் எல்லாவற்றையும் மேற்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளு-கின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்-திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே - பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்-பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஆகிவிட்டது. அது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக்கும் குடியான-வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ் ஜாதிக்-காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவுகூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது உறுதி.

நமது பொருளாதாரக் கஷ்டமெல்லாம்- முதலாவது அனாவசியச் செலவுகளுக்கும் அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமேயாகும். 100-க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவதனா-லேயே வீணாகி விடுகின்றன.

இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கத்தில் பொருள்க-ளெல்லாம் போய்ச் சேரும் படியாகவும் விடுகின்றன.

மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும் சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவிடும்-படியான முறைகளே இங்கு வெகு காலமாக இருந்து வருகின்றன. அதாவது, புத்தியைச் செல-வழித்துக் குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்-விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியா-வின் பொருளாதாரக் குறைவிற்குக் காரணமாகும்.

- தந்தை பெரியார்

(களக்காட்டில், 27.12.1930-இல் சொற்பொழிவு, குடிஅரசு 18.1.1931)

Thursday, May 30, 2013

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்?

மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக் களாலான வேட்கை மய்யம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது அந்த வேட்கை மய்யத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டா கிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும்போதும் வேட்கை மய்யத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப் பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதை விட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணம்.

தொலைக்காட்சித் திரைகளில் உருவத்துக்குப் பின்புறம் நிழலுருவம் தோன்றுவது ஏன்?

தொலைக்காட்சி செய்கைகள் ஒளிபரப்புக்காக, உயர் அதிர்வெண் கொண்ட வானொலி அலைகளைப் போன்றே செலுத்தப்படுகின்றன. 

இவ்வலைகள் ஆன்டெனாக்களில் சேமிக்கப்பெற்று, பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியினுள் இருக்கும் மின்னணு மற்றும் படக்குழாய்களால் படங்களாக மாற்றப்படுகின்றன. 

தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் சுற்றி பல அடுக்கு உயர்மாடிக் கட்டடங்கள் சூழ்ந்திருக்குமானால், மின்காந்த அலைகளை, அக்கட்டடங்கள் மறிக்கும். இவ்வாறு மறிக்கப்பட்ட அலைகளையும் ஆன்டெனாக்கள் ஏற்றுக் கொள்ளுகின்றன. 

இந்த அலைகள் ஏற்கெனவே நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சேமிக்கப்பெற்ற அலைகளைவிட ஓரளவு நீண்டிருக்கும். இவ்வலைகளால் உருவாக்கப்படும் படம் மூலப் படத்திற்குப் பின்னால் நிழலுருவமாகக் காட்சியளிக்கும்.

பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?

பறவைகளுக்குப் பற்கள் கிடையாது!! ஆனால் எப்படி உண்கின்றன என்று யாராவது யோசித்தீர்களா? அனேகமாக அனைவர்க்கும், குழந்தைகள் உட்பட, பறவைகளுக்குப் பற்கள் இல்லை என்பது தெரிந்திருக்கும். கோழி, புறா,. குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான ஆகாரத்தைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். அவை பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை எப்படி ஜீரணிக்கின்றன?
இதற்கான பதில், உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின்(Stomach) கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள விஷேச அமைப்பான Gizzard என்னும் பகுதியாகும். மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது Gizzard ன் வேலையாகும். கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்ய Gizzard பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும் (Gizzard stones or Gastroliths), மணற்துகள்களையும் (bits of gravel)பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது. சிலவகையான முதலை வகையான ஊர்வன, Dinosaurs,, மீன்கள், மண்புழுக்களுக்கு இருப்பது போல Gizzard அனைத்து வகையான பறவைகளுக்கும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் Gizzard தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் நொதியப்பூச்சு (Enzymes) இருக்கும். ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு Gizzard என்பது பல் மருத்துவச் செலவில்லாத உபரிப் பற்கள் நிரம்பிய மேசை இழுப்பறைக்கு ஒப்பாகும்.

பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்

சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை  டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப் பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்கூபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது. நீருக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவது என்பது சுலபமான விஷயம் அல்ல.
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதன் வென்றிருக்கிறான். மனிதனின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற தென் துருவத்தை எட்டியிருக்கிறான். வட துருவத்தையும் விட்டு வைக்கவில்லை. சந்திரனுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் உண்டென்றால் அது கடலடித் தரையாகும்.
விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஒரே கணத்தில் பற்பசை டியூப் போல நசுக்கப்பட்டு மடிந்து போவார். கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும்.
கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை - சுமார் 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படியாக கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்தில் இறங்குவதில் பிரச்சினைகள். கடந்த பல ஆண்டுகளில் கடல் ஆராய்ச்சித் துறையில் பல நவீன தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் ஆழ் கடலை மனிதனால் இன்னும் வெல்ல முடியவில்லை.

மகுடிக்கு மயங்குமா பாம்பு?


உண்மையில் சொல்லப் போனால் பாம்புக்குச் சுத்தமாகக் காது கேட்காது. இது ஒரு செவிட்டுப் பிராணி என்பதே உண்மை. ஊர்வன வகையைச் சார்ந்த எந்த உயிரினத்திற்கும் பாலூட்டிகளைப் போல புறக்காது கிடையாது. ஆனால், மாண்டிபுளார் வழி எனப்படும் காதுத் துளை உண்டு. இத்துளைகள் மூலம் இவை ஓசையை நன்கு கேட்டு அறிய முடியும். ஆனால், பாம்புக்கு மாண்டிபுளார் செவியும் கிடையாது.
அதேசமயம் பாம்பு மிகவும் அருகில் ஏற்படும் அதிர்வு களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றது. இதைத்தான் பாம்புக்கு கூர்மையான செவி அமைப்பு உடையதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், பாம்பாட்டிகள் மகுடி ஊதும்போது, மகுடி ஓசை மென்மையாக பூமியில் தவழ்ந்து ஓடுகிறது. அவ்வாறு தவழ்ந்தோடும் இசை பூமியின் தரை மீது இருக்கும் பாம்பின் உடலில் பட்டு அதிர்கிறது. அந்த அதிர்வுக்கு ஏற்பவே பாம்பு படமெடுத்து ஆடுகிறது.

Wednesday, May 29, 2013

சிந்தனைப் பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.
##############
மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.
##############
பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
##############
மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
##############
அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.
- தந்தை பெரியார்