இதற்கான பதில், உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின்(Stomach) கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள விஷேச அமைப்பான Gizzard என்னும் பகுதியாகும். மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது Gizzard ன் வேலையாகும். கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்ய Gizzard பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும் (Gizzard stones or Gastroliths), மணற்துகள்களையும் (bits of gravel)பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது. சிலவகையான முதலை வகையான ஊர்வன, Dinosaurs,, மீன்கள், மண்புழுக்களுக்கு இருப்பது போல Gizzard அனைத்து வகையான பறவைகளுக்கும் இருப்பதாகத் தெரிகிறது. இதன் Gizzard தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் நொதியப்பூச்சு (Enzymes) இருக்கும். ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு Gizzard என்பது பல் மருத்துவச் செலவில்லாத உபரிப் பற்கள் நிரம்பிய மேசை இழுப்பறைக்கு ஒப்பாகும்.
அறிய வேண்டிய செய்தி!
ReplyDeleteதெரிந்து கொள்ள வேண்டிய செய்திதான். பறவைகளுக்கு பற்கள் இருந்தால் அந்த எடையின் காரணமாக அவைகளால் பறக்கமுடியாது போகும் அபாயம் இருக்கிறது.
ReplyDelete