Wikipedia

Search results

Friday, September 27, 2013

மதிய தூக்கம் மழலையர் கற்றல் திறனை மேம்படுத்தும்!

மூன்று வயதுமுதல் அய்ந்து வயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வா ளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மதிய சாப்பாட்டிற்குப் பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
மூன்று முதல் அய்ந்துவயது வரையிலான குழந் தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின் விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எட்டப்பட்டிருக்கிறது.
இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு  அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
குழந்தைகளின் நினைவாற்றலை நிலைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும், ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியமாகிறது என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால் பார்த்து அதன்மூலம் கற்றவற்றை நினைவுகூர்வதில் சிறப்பாக செயற்பட்டதாகவும், மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் மேம்பட்டு இருந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம் தூங்க விடாதபோது அவர்களின் கற்றல் திறன் குறைவதையும் தாங்கள் கண்டறிந்ததாக ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
இந்த பரிசோதனையில் பங்கேற்ற 14 குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் மூளையின் கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக செயற்படுவதையும் இந்த ஆய்வாளர்கள் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர்.
தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை தாங்கள் மருத்துவ முறையில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரிபெக்கா ஸ்பென்ஸர்.
குழந்தைகளுக்கு வயதாக ஆக, இந்த மதியநேர தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல் போகும் என்று கூறும் அவர், மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மதியநேர குட்டித்தூக்கம் மனிதர்களின் மூளைத்திறனை, விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும் என்பது ஏற்கெனவே ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட செய்தி என்றாலும், மழலையர் பள்ளி மாணாக்கர்களிடமும் இது நல்லபலனைத்தரும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்திருப்பதாக கூறுகிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.
மழலை வயதில் குழந்தைகள், இயற்கையாகவே தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை உள்வாங்கி பகுத்துப்பார்த்து சேமித்து வைத்துக்கொள் வதற்கு சராசரியாக ஒருநாளைக்கு 11 முதல் 13 மணிநேரம் அவர்கள் தூங்குவது அவசியம்.
எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக கருதுகிறார் மருத்துவர் ராபர்ட்.
மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும், எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
தங்களின் குழந்தையின் மழலைக்கற்றலை ஊக்கு விக்க நினைக்கும் பெற்றோர்கள், அவர்களை மதிய நேரம் குறைந்தது ஒருமணிநேரமாவது தூங்கவிடுங்கள் என்பதே இந்த மருத்துவர்கள் செய்யும் பரிந்துரை.

நிறுவனங்கள் விரும்பும் படிப்பு எது?

எந்தத் துறை வேலை வாய்ப்பென்றாலும், அது நிர்வாகத் துறை வாய்ப்புகளே என்றாலும் இன்று சர்வசாதாரணமாக இன்ஜினியரிங் பட்டதாரிகள் கடும் போட்டியை ஏற்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப் படுவது பிற சாதாரண பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் தான்.
இன்ஜினியரிங் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க நினைப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகின் றனர். ஆனாலும் சமீபத்திய சர்வே ஒன்று இன்ஜினீயரிங் பட்டமேற்படிப்பு முடித்திருப்பவர்களுக்கு சாதக மான சூழல் இல்லை என்றே கூறுகிறது.
பெரிய நிறு வனங்கள் எல்லாமே இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு முடித்திருப் பவர்களே போதும் என்று நினைப்பதாக இந்த சர்வே கூறுகிறது. எம்.இ., எம்.டெக்., படித்திருப் பவர்களை விட பி.இ., பி.டெக்., படித்திருப்பவர்கள் வளைந்து கொடுப்ப வர்களாக இருப்பதுதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்றும் சர்வே கருதுகிறது.
இன்ஜினீயரிங் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர் களிடம் பட்டதாரிகளை விட பெரிதும் எதிர்பார்க்க முடிவதில்லை என்றும் கொஞ்சம் கூடுதலாக இவர்கள் நிதானமாக செயல்படுபவர்களாக இருப்பது ஒன்று தான் இவர்களின் பிளஸ் என்றும் நிறுவனங்கள் கருது கின்றனவாம்.
எம்.டெக்., போன்ற படிப்புகளை முடித்திருப்பவர்கள் ஆய்வு தொடர்பான வேலைகளையே விரும்புவதும் இவர்களை நிறுவனங்கள் புறக்கணிப்பதான் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. தற்போதைய சூழலில் 10 பி.இ., பி.டெக்.,குகளுக்கு மத்தியில் ஒரேயொரு பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர் மட்டுமே பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்.
பட்ட மேற்படிப்பு முடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் மட்டுமே கேம்பஸ் மூலமாக பணிக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றனர். வாரங்கலில் உள்ள என்.அய்.டி.,யில் 720 பி.டெக்., மாணவர்களில் 80 சதவீதத்தினருக்கும் மேலாக பணி வாய்ப்பைப் பெற்றனர்.
ஆனால் இதே கல்வி நிறுவனத்தில் 500 பட்ட மேற்படிப்பு மாணவர்களில் 150 பேர் மட்டுமே பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த காரணத் தினால் சமீப காலமாக பல கல்வி நிறுவனங்கள் இரட்டை இன்ஜினீயரிங் படிப்புகளை அறிமுகப்படுத்தி யுள்ளன. இவற்றுக்கு அதிக வரவேற்பும் பணி வாய்ப்பும் உள்ளது.

ஏர்போர்ட்ஸ் அதாரிடி பணி வாய்ப்பு

இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விதத்தில் அவற்றின் செயல்பாடுகளை முன்னேற்றுவதற்காக ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 100 ஜூனியர் அசிஸ்டன்ட் - பயர் சர்வீஸஸ் காலி இடங்களுக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
15.10.2013 அன்று 30-க்குள் இருக்க வேண்டும்.  10ஆம் வகுப்பு முடித்துவிட்டு மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் 3 ஆண்டு முழு நேர டிப்ளமோ படிப்பை 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூ படிப்பை 50 சதவிகித மதிப்பெண் களுடன் முழு நேரப் படிப்பாக முடித்தவர்களும் விண்ணப்பிக் கலாம். இவற்றுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் தேவை.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் மெஷர்மெண்ட், டிரைவிங் டெஸ்ட், எண்டியூரன்ஸ் டெஸ்ட் மற்றும் நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் :   Airports Authority of India என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக ரூ.400/-க்கான டி.டி. மற்றும் முழுமையாக நிரப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப் பங்களை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: : The Regional Executive Director, Airports Authority of India, Northern Region, Operational Office, Rangpuri, Gurgaon Road, New Delhi - 110037
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 15.10.2013
முழு விபரங்களறிய உதவும் இணையதள தொடர்பு முகவரி: www.airportsindia.org.in/ employment_news/Advertisement_fire.pdf

பெல் நிறுவனத்தில் ஆர்டிசன் வேலை

இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரி கல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவன மாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அய்தராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மெஷினிஸ்ட் - 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37 வயது : 01.09.2013 அன்று 27 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதிகள் : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு என்.ஏ.சி., என்.டி.சி., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தெலுங்கு மொழி தெரிந்தால் நல்லது.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.125/- Power Jyoti Account No.32838381735 என்ற அக்கவுண்ட் எண்ணில் Bharat Heavy Electricals Limited, Ramachandrapuram, Hyderabad  என்ற பெயரில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தை ஆன்-லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 05.10.2013 முழுமையான விவரங்களை இணைய தளம் வழியாக அறிய : http://recruit1.bhelhyd.co.in/

இலங்கைப் போர்க் குற்றவாளிகளை மார்ச் மாதத்துக்குள் தண்டிக்க வேண்டும்: நவநீதம்பிள்ளை அறிக்கை

கொழும்பு, செப். 26-இலங்கை இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். தமிழர்கள் படுகொலையை தடுக்க எந்த உலக நாடும் முன் வராத நிலையில் அய்.நா. சபை இதில் காலதாமத மாக உண்மையை உணர்ந்து கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையம் மட்டும் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அய்.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம் பிள்ளை போரில் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு பகுதிக்குச் சென்று நேரில் விசாரணை நடத் தினார்.
அப்போது அவர் கண்டதை யும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் மூலம் வாய்வழி அறிக்கையாக அய்.நா. மனித உரி மைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதில் கூறி இருப்பதாவது: போரின் போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், ராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை.
நம்பகத் தன்மை இல்ல
குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராணுவமும், கடற்படையும் நடத் தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை. போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறை யில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் தனி யாக விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது.
விடுதலைப்புலிகள் தொடர்பு டைய போர் குற்றங்கள் முறை யாக விசாரிக்கப்பட வேண்டும் சம்பந்தப்பட்டோர் மீதான வழக் குகள் விரைவுபடுத்தப்பட வேண் டும். திருகோணமலை கடற்கரை யில் 5 மாணவர்கள் கொல்லப் பட்ட வழக்கு ஏ.சி.எப் நிறுவனத் தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப் பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற் றில் முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளது என நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் ராணுவமும் சென்றது குறிப்பிட்ட நவநீதம் பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் இது இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக் குக் கொண்டுவரப்பட்டது என் றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும்.
இராணுவ நடவடிக்கை கவலை அளிக்கிறது
இலங்கையில் சட்டத்தின் ஆட் சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப் படுவது மற்றும் அருகிப்போவது ஆழ்ந்த கவலை அளிக் கிறது. 17 ஆவது சட்ட திருத் தத்தை மீண்டும் கொண்டு வருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப் பட வேண்டும் வட மாகாணத் தேர்தல் நடைபெற் றதை வரவேற்கிறோம் 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று அதிபர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்பு கிறோம்.
போர் முடிந்து நான்கு ஆண்டு களான பிறகும் அங்கு காணப்படும் ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது.
தனியாக வசிக்கும் பெண்கள், சிறுமிகள்மீது ராணுவத்தின் பாலியல் அத்து மீறல்கள்   கவலை அளிப்பதாக உள்ளது. பாலியல்  அத்து மீறல்களை அரசு சிறிதும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தனியார் நிலங்களை ராணுவத் தேவைகளுக் காக கட்டாயமாக கையகப்படுத்தப்படுகிறது. வட மாகாணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நட வடிக்கைகளிலும், கல்வி, விவசாயம், சுற் றுலா போன்ற துறை களிலும் ராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவ தாகவும் அவர் தெரிவித்துள் ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விஷயங்களில் இருந்து ராணு வத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள் ளுமாறு அரசிடம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள் ளார்.
கற்றறிந்த பாடங்கள் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளில் கூடு தலாக 53 பரிந்துரைகளை அமல் படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டுகிறோம்.
காணாமல் போனோர்பற்றி....
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும், கிழக்கிலும் காணா மல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந் தாலும், போருக்குப் பிறகு கொழும் பிலும் நாட்டின் இதர பகுதி களிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவுபடுத்த வேண் டும் காணாமல்போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணை யங்களால் பயனேதும் ஏற்பட வில்லை.
காணாமல் போனோர் தொடர் பிலான விசாரணைகளை துரிதப் படுத்த அய்.நா. நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நம்புகிறேன்.
நவநீதம் பிள்ளையின் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று அய்.நா.வுக்கான இலங்கை அரசின் பிரதிநிதி ரவிநாத் தெரிவித்துள்ளார். அய்.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் அவர் பேசுகையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோர அவருக்கு அதிகாரம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.

Friday, June 14, 2013

ரிசர்வ் வங்கி பணிவாய்ப்பு

இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறு வனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ்வங்கி எனப்படும் ஆர்.பி.அய்., திகழ்கிறது. மத்திய நிதிய மைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் மட்டுமே கிளைகள் உள் ளன. இந்த கிளைகளில் உள்ள 525 உதவி யாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தக் காலி இடங் களுக்கு அரசு நிபந்தனைகளின் படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
காலி இட விபரங்கள்: ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களான ஆமதாபாத்தில் 25ம், பெங்களூருவில் 31ம், போபாலில் 25ம், புவனேஸ்வர் மற்றும் சண்டிகாரில் தலா 20ம், சென்னையில் 35ம், கவுகாத்தியில் 25ம், அய்தராபாத்தில் 23ம், ஜெய்பூரில் 17ம், ஜம்முவில் 16ம், கான்பூர் மற்றும் லக்னோவில் 25ம், கோல்கட்டாவில் 50ம், மும்பையில் 131ம், நாக்பூரில் 15ம், புது டில்லியில் 28ம், பாட்னா வில் 24ம் மற்றும் திருவனந்தபுரம்/கொச்சி யில் 15ம் உதவியாளர் காலி இடங்கள் நிரப்பப் பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட உதவியாளர் காலி இடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பி யவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித் திருக்க வேண்டும்.
இத்துடன் கணினியில் வேர்டு பிராசசிங் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண் டும். எந்த மாநிலத்திலுள்ள காலி இடங் களுக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநில ஆட்சி மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பாரத ரிசர்வ் வங்கியின் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-அய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த இடங்கள் ஆன்-லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறை யிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.06.2013
ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்: 20.07.2013,21.07.2013,27.07.2013,28.07.2013

Tuesday, June 11, 2013

உண்மையான நாவன்மை எது?

நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.
மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.
நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம்.  எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:
நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.
இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.
என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.
எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்!  இல்லையா?
அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!
அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.
நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!
தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!
காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!
சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!
எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!
நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்
என்ற  கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!
நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!
எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.
அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?
எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!
- கி.வீரமணி